Friday 6 July 2012

முன் வந்த முதல் சந்திப்பு


அந்த நிமிடம் வருவதற்கு
இத்தனை தொகையாய் மணித்துளிகளை
வைத்தது யார்

சங்கத் தமிழில் தேடிய வார்த்தைகளில்
காத்தல் என்ற சொல்லை வரிகளில்
எழுதியவர்கள்
உணர மறுத்ததால் தான் என்னவோ
உண்மை என்னை எழுதத் துாண்டியதோ

இரவுகளில்  வானைப் பார்க்காதவன் நான்
இன்று
உன் நினைவுகளால்  நிலவையும் மறந்து
நட்சத்திரங்களை எண்ணி
என் கணித அறிவுற்கு
மீண்டும் ஒரு பள்ளி சென்றேன்


ஒத்த முனைகள் இரண்டும் ஒட்டாதென்பார்கலே
அதனால்தான்
நாம் ஒவ்வா முனையாகப் பிறந்தோமோ
ஈர்ப்பு சக்தி உனக்கு இருப்பதால்தான் என்னவோ
இங்கு யாவும்
இயங்கும் சக்தியை பெற்றனவோ

பூவை நோக்கி வண்டு பறப்பதால்தான்
அந்தப் பூக்கள் கூட தேனனை ஊற்றுதோ
பாவம்
அந்த பூக்கள் எல்லாம் உன்னை பார்ப்பதால்
பசியில் எல்லா வண்டுகள் கூட்டும் பறந்து திரிகிறது

உன் ஏக்கத்தோடு  துாங்கும் போது
என் கட்டில்கூட என் மனதில் உள்ள உன்னைப் பார்த்து
எந்தன் மீது கோவம் கொள்ளுது

வானம் என்ன பூமி கட்டும் நீலச் சேலையா
நான்
காதல் எனும் வலியால் துடிக்கும்
இராம பக்தனா !!
பாலில் சோரும் நீரைக் கூட பிரித்துப் பார்க்கலாம்
உந்தன் மீது கொண்ட காதல் என்றும் பிரிய நினைக்குமா

உன் நினைவினாலே
வந்த வார்த்தை வற்றிப்போனதே
என் வரிகள் எல்லாம் வறுமையாலே தோற்றுப்போனதே
உன் நிழலைக் கண்டால்  ஆம்ஸ்ரேங் கூட நிலாவை மறப்பான்

பொறுமையின் எல்லை சோதிக்கும் புவியே
உன் சுழற்ச்சி வேகம் சுமையாய் தெரியுதே
தனிமையில் என்னை  பேச வைத்தாய் பெண்னே
உன் தரிசனம் காண வருவேன்  முன்னே
பொறுமையாய் சொல்ல வார்த்தைகள்  இல்லை
அருகினில் வந்து அணைத்ததும் அறிவாய்
அன்பின் ஆழம் நான் தான் என்று
ப.பார்தீ

No comments:

Post a Comment