Saturday 7 July 2012

அழிவே அழியுதே


முற்றிப் பழுத்தபழம்
மண்ணில் விழுந்த பின்
மரமாய் எழுவதுண்டு
அற்றாங்கே சில
வெம்பி பழமாகி
வீணாய் போவதுண்டு

பகல் மேல் கறுப்படிக்க
நிலை கூடும் மழைமேகம்
சில காலம் தரித்ததில்லை
சிந்தையும் அதுபோல
சில நேரம் அதுவாக
சில தவறை செய்வதுண்டு


மனமெனும் பெரு மாயை
மரம் தாவும் குரங்காக
மூ ஆசை பந்தலிலே
மூழ்கடிக்க விதி செய்யும்

ஆசைக்கு அழிவுண்டு
அதன் வழியே பிறப்புண்டு
புதிதொன்று தோன்றலுற
பழதாங்கே நினைவாகும்
நினைவு சுமைகள் தாம்
நம்மை
மீழ் நிலைக்க திரும்பவைக்கும்

அழியும் என்ற உண்மை
யார் மனமும் உணர்ந்ததில்லை
அழியும் வேளையிலே
ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது
நிலையில் இவ்வுலகில்
நித்தம் வரும் சுழற்சியாம்

ஓர் நாள் போனதென்றால்
உனக்கு நீ கொலைகாரன்
என்ற உண்மை உணர்ந்து விடு
உலகத்தை நேசிப்பாய்


ஆசை அழித்துவிடும்

ப.பார்தீ

No comments:

Post a Comment