Tuesday 3 July 2012

சுகம்


பட்டாம் பூச்சியின்
வண்ணக் கோலங்களாக
பல நுாறு எண்ணக் கனவுகளுடன்
வாழ்கைக்கு தோண்டப்படும்
அத்திவாரம்
ஆசை எனும் பீடையில்
ஏற்றப்பட்டு
அழகிய எச்சங்களால்

ஆண்ம திருப்திகளை
அழிக்கத் துடிக்கின்றது

ஏக்கங்களின் தேடலால்
சிந்தனையின் செயல் யாவும்
சிறைப்படுத்தப்பட்டு
வானுயரப்பறக்க விடப்பட்ட
கொடிக்கம்பங்களை
அசைக்கப் பார்கின்றது

எரிந்த சாம்பலில் எழும்
பீனிஸ் பறவை
நினைவுக்குள் நித்தமும்
உயிர் பெறும் போது
ஆசையின் அர்பங்களை
உணர்ந்த மனங்கள்
அடி பணியது

பூமிக்கும் வானுக்கும் இடையில்
நிறப்பப்பட்ட
காற்று வெளியாய்
கண்களால் நரம்பு செய்து
சிந்தையால் சுரமேற்றப்பட்ட கொள்கைகள்
கொசு விழுங்க
நினைக்கும்
தேன் அடைக்கும் ஈடாமே

"சந்தர்ப்பம் வரும்போது சரியாகச் சிந்தி மாறும் உலகு "
ப.பார்தீ

No comments:

Post a Comment