Saturday 7 July 2012

திசை ஓடி


தூரிகையாக்கப்பட்ட
உன் கால் பெரு விரலால்
வரைந்த ஓவியத்தில்
சொக்கியது என் சிந்தை

இரவு பகல் இரண்டும்
விதியான போது
எமக்கு  மட்டும் இரண்டும்
ஒன்றானதே


கடிகாரத்தை  கண்டு பிடித்த
காலனின் கணக்கிற்கு
ஏனோ நாம்
கட்டுப்படவில்லை

கதைக்கும் போதும் எழுதும் போதும்
அன்புக்கு மறு பெயராக
நினைக்கும் உந்தன் பெயரை
நினைவால் சுமக்கிறேன்

சருகாக பறந்த இலைகள்
எம் காதலை பார்தால்
மீண்டும் பசுமரத்தில் ஒட்டி விடும்
தன் காலத்தை  நீடிக்கும்
எமைக் கான

அடடா அடை மழையின்
அழிவை விட
அதன் ஆக்கத்தின் பயன்
காலத்திலும் பேசத் தூண்டும்

அன்புக்கு மட்டும் பிரிதல்
என்பது கிடைக்கா விட்டால்
அதன் ஆழம்
யாரும் அறிவாரோ

மீண்டும் திரும்பத்தெரியாத
நதியின் பாதையில்
எம் பயணம்சேரும் இடத்தில் - நாம்
திழைக்கும் இன்பங்களின்
மீண்டும் பிறப்புத் தோன்றும்


அன்பின்  அடையாளமாய்
ப.பார்தீ

No comments:

Post a Comment