Sunday 17 June 2012

வெட்டாச் சுரக்கும்


ஞாபகங்களின் நினைவகளால்
என் கண்கள்
மீண்டும் ஒர் மழைக் காலத்தில்
புதைந்தது

எத்தனை முறை தான் எச்சரிப்பது
என் மனதிற்கு
உருக் கொடுக்காதே என்று


உன்னைத் தவிர
என் கண்களை அலங்கரிக்கும்
ஆபரணத்தை யாரும் பார்த்ததுண்டோ

நீ தானே இந்த உலகின்
ஆக்குரோசமான
நீர் ஊற்று

ஊற்றாகப் பிறப்பெடுக்கும்
உனக்கு
என்  குணத்தின்
ஒப்பில்லாத பணி

போற்றி விழிக்கையிலும்
பூரிப்பு கொள்கையிலும்
ஆற்றல் மறுக்கையிலும்
அணை உடைத்த சுதந்திரம் உனக்கு

நீருக்குள் நிலம் தாண்டிருப்பதாய்
என் நினைவுகளில் நீ
உறைந் திருக்கின்றாய்

உன் வரவுக்கு மட்டும்
என் கரங்கள்
வரிவிதிப்பு செய்வதில்லை
வரவின்போது வகையாய் தடவுகின்றது
எனோ அந்த பாசம்

மீண்டும் ஒரு முறை
நீ எனக்குள் வா
இறுக்கமான என் நினைவுகள்
பசுமை பெறட்டும்

இரக்கமுள்ளவர்கள்
இனிய நினைவுகளை சுமக்க வேண்டாம்
அவனுக்கு  அங்கு வேலை அதிகம்
ப.பார்தீ

No comments:

Post a Comment