Wednesday 6 June 2012

அடையாளம்


அந்த தேசத்தை விட்டு
பிரிக்க முடியாத நீங்கள்
எங்கிருக்கிறீர்கள்

ஓய்வும் விடுதலையும்
மனிதனுக்கு தேவை என்றால்
நீங்கள் மனிதன் அல்லவே

நீங்கள் வைத்திருந்த உறுதியும்
நம்பிக்கையும்
எங்களுக்கு சொல்லித் தாருங்கள்


உங்கள் தத்துவத்தை
அடைவதாகச் சொல்லி
எல்லாம் தொடங்கியவர்கள்
சிதைத்துக் கொண்டே போகிறார்களே

வழிகாட்டலுக்கு உறுதியில்லாத
அவர்கள் நடைமுறைகள்
எதிர்காலத்தை சிதைக்கப் போகின்றதே

பார்த்து பார்த்து நீங்கள்
செதுக்கிய சிற்பம்
பாதுகாப்பார் அற்று பாழடைகிறதே

எதிர்காலத்திற்காக
நாங்கள் எங்கள் முகவரியை
தேடுகின்றோம்

உங்கள் பேரின் பின்னால்
நின்று
எங்களைப் பேரம் பேசுகிறார்களே

தேடாதே உருவாக்கு
என்ற உங்கள் தத்தவத்திற்கு
மீண்டு விட்டோமா?

உங்கள் வருகையால் தான்
எங்களை மீண்டும்
காண்போம் அடையாளம்
ப.பார்தீ

No comments:

Post a Comment