Thursday 7 June 2012

அவள்


அதோ பார்
நேற்று என்னோடு இருந்தவன்
இன்று அவளோடு இருக்கிறான்

நேற்று
என் உதட்டில் தேன் பருகியவன்
இன்று அவள் உதட்டிலும் தேடுகிறான்


நேற்று
என் கை கோர்த்து நடந்தவன்
இன்று அவள் கையை பற்றுகிறான்

நேற்று
என் செயலுக்கு பரிசு தந்தவன்
இன்றும் பரிசோடு இருக்கிறான்

நேற்று
என் கடைக்கண்ணில் காதல் தேடியவன்
இன்று அவள் கடைக்கண்னுக்குள் இருக்கிறான்

நேற்று
என்னை தன் உலகம் என்றவன்
இன்று அவளை தன் உயிர் என்கிறான்

நேற்று
என் தலை கோதலில்  தாய் என்றவன்
இன்று அவள் தாயினும் மேல் என்றான்

நாளை
ஒரு உண்ணதம் காத்திருக்கு
நானும் அவளும்
உனையல்லவா
தேடுவோம்

இது தான் காதல் என்றில்லை
இதுவும் காதலாம்
எது வசதி
ப.பார்தீ

No comments:

Post a Comment