Monday 24 June 2013

தனிமை கரைத்த பொழுது


மேகம் கருக்கும் நேரம் பெண்நே
மின்னல் ஒழிரக்கண்டேன்
கூந்தல் மறைவில் நின்று கண்நே
வானம் கரையக்கண்டேன்


நீரில் குழித்த மீன்கள்
நெஞ்சில் தாகம் தணிக்கக்கண்டேன்
பூவை முகர்ந்த வண்டு
உன்னில் தேனைப்பருகக்கண்டேன்

பாயும் நதிகள் எல்லாம்
கண்ணில் நீந்தித் திரிதல் கண்டேன்
பொழுதும் புலரும்போது
உந்தன் சிரிப்பில் விழிக்ககண்டேன்

உணவு சமைக்கும்போது
உப்பாய் நீயும் சேரக்கண்டேன்
கவிதை எழுதும்போது
மொழியாய் காதல் நானும் கொண்டேன்

பொழுது கரையும்போது
புவியில் தனிமை கரையக் கண்டேன்
இதுதான் வாழ்க்கை என்றால்
எனக்குள் உயிராய்  உன்னைக்கண்டேன்
ப.பார்தீ

No comments:

Post a Comment