Monday 24 June 2013

விலக்கல்ல நான்


தெட்டு விட 
எத்தனித்துக் கொண்டே இருக்கின்றேன்
ஏனோ முற்றுகையிட முடியாத 
எண்ணம் எனக்குள்

தட்டித் தட்டி
பாளையின் பயனை அருந்தியபோது
வலிக்கும் சுகத்திற்கும் இடையான
இரட்டை தன்மையில்
எண்ணத்தை விழிக்கின்றேன்

உளைப்புக்கும் வறுமைக்கும் இடையில்
ஒற்றுமையைத் தேடி 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில்
மரணம் ஊஞ்சல் ஆடுகின்றது


அவனைப்போல் இனைப்போல்
என்ற கற்பனைகள்
காலத்தை உணறவிடாது
மரண முகவரியில் மொளனிக்க
யாவரும் தனக்கானதை தட்டியதில்லை

சமூகமோ
நேர்மையான வெளிப்படை உள்ளங்களை
சாலரப்பார்வையால்
நுாதன கேள்விகளாக்கி 
விடைகளை தாங்கலே தீட்டும் 
சரித்திரப் படைப்புக்கள்

விலக்கல்ல நான்
ப.பார்தீ 

No comments:

Post a Comment