Monday 24 June 2013

கலங்கிப்பின் தெளியும்


எல்லாவற்றைவும் மறந்துவிட்டாயா?

பார்க்கப்போனால் மொளனமான இந்த உலகத்தில்
நமக்குள் இருக்கும் காற்று 
ஆத்மாத்தமாக நம்மை இயக்குதென்பேன்

நமது இதயங்கள் என்றும் 
சச்சரவிட்டுக் கொண்டதில்லை
நமது எண்ணங்களைத் தவிர

எண்ணங்கள் அவ்வப்போது
இங்கிருந்து பொறுக்கி
கற்பிக்கப்பட்டவையே என்பேன்

காலத்திற்கு காலம்
எண்ணங்கள் கலங்கித்
தெளிவடையும் என்பேன்

நாளாந்த வாழ்வுக்கு 
எண்ணங்களின் சேர்க்கை தேவைதான்
அது ஆத்மசுத்தியன்று என்பேன்

தன்னை ஓருவன் புரிந்து கொள்ளாதபோது
அவன் துன்பப்படு கின்றான்
இங்கு துன்பப்படாதவன் யாருமில்லை என்பேன்

ஒரு முறையாயது இயற்கையோடு 
பிறப்புக்கள் சேர்ந்தால்
வார்தைகள் அற்ற புரிதல் பிறக்குமென்பேன்

நல் மனிதம் வளருமென்பேன்
ப.பார்தீ

No comments:

Post a Comment