Tuesday 7 May 2013

விடிவே கனவு தரும்


அடுத்த இலையுதிர்காலம்
தெற்கே வரவேண்டும் 
என்றுதான் விரும்புகிறேன்

ஆசையின் பிடியில்
அறியாமையின் போறில்
எங்கள் வீட்டு முற்றத்தை மட்டும் 
எத்தனை தடவை நாங்கள் சுத்தம்செய்வது


வாடைக்காற்று வரும்போது எல்லாம்
சேற்றின் வாடை வீசும்போது எல்லாம்
இந்த முறையாவது, எங்கள் தோட்டம் பசுமையாகிவிடாதா
என்ற ஏக்கம் செல்லரிக்கின்றது

ஒவ்வொறு இரவிலும், தூக்கத்தை அழைக்கும்போது
விடியாத பொழுதொன்று கிடைத்துவிடாதா
விடிந்துதான் என்ன? 
அடுத்த கனவிலாவது எங்கள் கொடி ஏறிவிடாதா என்ற ஏக்கம்

புனிம் என்று ,யார் யாரோ புடம்போடும் மனிதாபிமானங்கள்
எங்கள் வீட்டிற்கு வரமறுத்தது
நாங்கள் வீட்டை தொலைத்து உறவைப்புதைத்து 
வரலாற்றில் கரைந்து உரிமை கேட்கும் பிணங்கள் ஆனோம்

பூமிக்கும் வானுக்குமிடையில்
பறந்து கொண்டு
எங்கள் விதைகளை எங்கே நடுவது?
யார் பராமரிப்பது?
ப.பார்தீ

No comments:

Post a Comment