Tuesday, 26 February 2013

அழியும், ஆகும்



பிரிவே பிரபஞ்சத்தில்
பிழந்து கிடக்கும்
எண்ணற்ற வடிவங்கள்

இரவின் தனிமையில்
விழித்துக்கிடக்கும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் அதற்குச்சாட்சி


பனிக்கால இரவில்
இலைகளற்ற தாவரத்தில்
மோதும் காற்றின் நிலையும்
இதுவே

எங்கும் பரவிய பிரிவுத்துயரமே

மானிட வசிப்புக்களில்
அன்பாக காதலாக உறவாக
பாசமாக எதிர்ப்பாக அணைப்பாக
கண்ணீராகப் பிரசவிக்கின்றது

ஒவ் வோர் கவிஞ்ஞனின்
வார்த்தையிலும்
புதியவை தோன்றும்போது
பிரிவே பிரசவிக்கின்றது

இதுவே நியதி
ப.பார்தீ

No comments:

Post a Comment