Saturday, 10 December 2011

தொடரும்


மண் மரம்
செடி கொடி
காலம் கடந்த -  ஒரு
பூ

இச்சையின்றித்
துடிக்கும் இதயம்

இன்று எழுப்பும் ஓசை
இச்சைக்காக
காதுகளில் அல்ல
நிகழும் என்
வாழ்க்கைக்காக

பூக்கும் காய்க்காத
செவ்வரத்தைச் செடியாக
தோன்றும்
தொடராத எண்ணங்கள்

தன்னை இருட்டாக்கி - பால்
குடிக்கும் பூனை நிலை
கேள்வியும் பதிலும்
எனக்குள்
எனக்கு நானே
வெற்றியாளன்

தினமும் உதிக்கும் பொழுதாக
உணர்வு ஒன்று தான்
உருவம் மாறும்
ஏமாற்ற அல்ல
ஏக்கத்தால்

பட்டாம் பூச்சி
வாழ்கையல்ல
மகரந்த முறுக்கேறி
இனம் பெருக்கும்
பூ
விருப்பத்தோடு  தொடரும்

ப.பார்தீ

No comments:

Post a Comment