Friday 16 December 2011

வெடிக்கும் உண்மை


காலத்தின் பொறுமையால்
வளர்ச்சி காணும்
உயிரினம் வரும் போது
முழுமை பெரும்
பொறுமையோடு காத்து நிக்கும்
பசி எடுத்த கொக்கு


நந்தி முட்டுக்கட்டை அல்ல
முடங்கிக் கிடப்பதற்கு
ஆக்குரோசம் கொண்ட
புலி முன்னே

வற்றிய குளத்தில்
தாண்டு கிடக்கும்
தாமரை மொட்டு
நீரின் வருகைக்காய்

தொட்டுக் காட்டவோ
சுவட்டில் எழுதவோ
இது முடிந்த கதையுமல்ல
விந்தையான செயலுமல்ல
ஒரு தேவையின் ஏக்கம்

சந்ததியின் தேடலுடன்
சரித்திரம் பிறக்கும்
ஆக்க சக்தியாக
வெடிக்கும் உண்மை

ப.பார்தீ

No comments:

Post a Comment