Thursday 1 December 2011

நாடு ஆகுமே


அண்டி வாழ்ந்து அண்டி வாழ்ந்து
அடிமையாகி அடிமையாகி
கோபத்தோடு நாம்
கொடி பிடிக்கத் தொடங்கினோம்

வந்த காலம் யாவுமே
வசந்த காலம் அல்லவே
உண்ட சோற்றில் பிழை கூட
பிடிக்கும் கூட்டம் நாமடா


எதிரி கொண்ட வெற்றியோடு
எம்மில் தானே பிழை என
எமக்கு நாமே விமர்சனம்
எழுதி வைக்கும் காலமா

தவறு ஏது சரியுமேது
புரிந்து கொள்ள முடியுதா
அதை சரியுமாக்க
சிந்தை இங்கு எண்ணுதா

எருமைக் கூட்டம் பிரிதல்-கண்டு
அடித்துத் தின்ற சிறுகதை
பெருசு சொல்ல இளசு கேக்க
பெருமை கொண்ட எம்மினம்

மலையில் ஊறி கடலைச் சேர
கிளைகள் சேரும் ஆற்றைப் போல்
தலைமை சேர உழைக்கவேண்டும்
தகுதிப் போட்டி தவிர்க்க வேண்டும்

நீரை வெறுத்து கப்பல் செல்லும்
நியமம் இங்கே நடக்குமா
ஆழம் அறிந்து அலையும் பார்த்து
ஓட்டி செலுத்த வேண்டுமே

தெளிந்த நீரில் முகத்தைக் கான
வெறுத்த தில்லை நாமடா
தெளிவு செய்ய உமக்குள் போட்டி
தவிர்த்து நீரும் சேர்ந்துவா

கறையான் கூட புற்றைக் காணும்
கடுமையான உழைப்பினால்
உழைப்பிநோடு உறவும் சேர
எமக்கு நாடு ஆகுமே
ப.பார்தீ

No comments:

Post a Comment