Monday, 28 November 2011
விபச்சாரி
ஆண்களின் பார்வையில்
அவள் ஓர் நாயகி
அகிலத்தின் பார்வையில்
அவள் ஓர் அசிங்கம்
அடியேனின் பார்வையில்
அவள் ஓர் அபலை
இச்சையின் உச்சத்தால்
எச்சத்தை தேடிக்கொண்டு
அச்சம் அற்ற ஆண்கள் எல்லாம்
அலைந்து திரிதல் கண்டு
மிச்சம் உள்ள தம்முடலை
பிச்சைக் காசுக்காய் விற்கின்றாள் விபச்சாரி
கட்டாண குடும்பத்தில்
காமமும் உண்டுதான்
காமத்தின் உச்சத்தால்
காதலும் பிறக்குது
காசின் தேவைக்காய்
காதலை விற்பவள்
கண்ணகியை காட்டிலும் கற்புக்கரசியே
விலைமாது என்று சொல்லி
விலை கொடுக்கும் ஆண்கள் எல்லாம்
விபச்சாரி அவள் என்று
விளையாட்டாய் சொல்லிடுவர்
விலை வாங்கும் பொண்கலெல்லாம்
விபச்சாரி என்று சொன்னால்
விலை கொடுக்கும் ஆண்கள் எல்லாம்
வீணாகப் போனவரே
அன்பான ஆட வரே
அபலைகளை விட்டுங்கள்
அவர்களும் மனிதர்களே
உங்கள் தேவைக்காக
ஒரு சாட்டு சொல்லவேண்டாம்
உண்மையை உணர்ந்து கொண்டு
ஒரு பெண்னை திருத்தலாமே
உலகம் உம்மை வாழ்த்திடுமே
ப.பார்தீ
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment