Saturday 5 November 2011

பட்டணத்து மாப்பிள்ளை


பட்டணத்தில் மாப்பிள்ளையாம்
பெண் கேட்கச் சொல்கிறார்கள்
பேசுவது இலகு தானே
பட்டணமே மாப்பிள்ளைதான்

வெளி நாட்டு மாப்பிள்ளைதான்
வெள்ளி தங்கம் ஆகியாச்சு
தொலை துார உறவு பேண
தொலை பேசி உறவாச்சு

ஒரு மாத விடு முறையில்
ஓடி வந்தார் மாப்பிள்ளையும்
அவசரமாய் திருமணமும்
அரங்கேறி முடிந்தாச்சு

நாடு வந்த மாப்பிள்ளையோ
நாயகியின் பிரிவைப் போக்க
வீடுதனில் இனணயம் பூட்டி
விந்தையாக  காதல் செய்தார்

நீண்டகால இணையப்பேச்சு
காதலோடு கோபம் சேர்க்க
காலம் நீண்ட அமைதியோடு
கதையுமிங்கே குறுகியாச்சு

போட்ட விசா கையில் சேர
வருடம் ஒன்று ஆனதுவே
இங்கு வந்து மனைவிசேர-கணவன்
இரவுப்பகலாய் வேலை செய்தார்

வந்த பிள்ளை வாடிப்போக
சொந்தமெல்லாம் தொலைவில் ஆக
வந்த நாடும் வெறுத்துப் போக
வாடி நின்றாள் வந்த நங்கை

கணவன் வரும் வேளைக்காக
காத்து நிற்கும் பாவையிங்கே
துாங்கும்போது தனிமை போக்க
துணைக்கு சேர்ப்பாள் சுவரை இங்கே

காலம் இங்கே கரைந்து போக
கருவும் கூட குழந்தையாக
புதிய செந்தம் கிடைத்ததெண்ணி
பூரிப் போடு வாழலாநாள்

பெற்ற பிள்ளை துாக்கிச் செல்தல்
வந்த நாட்டில் அழகுமல்ல !
வண்டி தன்னில் ஏற்றிக்கொண்டு
வழி நெடுகப் பயணம் செய்வாள்

வரையறைக்குள்  வாழ்கை இங்கே
பற்றாக்குறை ஆகிப் போக
இரண்டு பேரும் வேலை போக
இடிந்து போகுது குடும்பம் இங்கே
ப.பார்தீ

No comments:

Post a Comment