Monday 14 November 2011

இனிதொரு மிருகமாவோம்


ஆறறிவில் ஓன்று இங்கே
அழிகணக்காய் போக வேண்டும்
கெட்ட குணம் அத்தனையும்
கெடு முதலாய் மாற வேண்டும்

ஒரு சாண் உண்டி கொள்ள
உணவு நாம் தேடவேண்டும்
அதற்காய் ஒற்றுமைாய் வாழ
உள்ளுணர்வில் பழக வேண்டும்

வர்க்க பேதம் அத்தனையும்

வாறி அள்ளி எறிய வேண்டும்
கீழ் சாதி மேல் சாதி அத்தனையும்
கேவலமாய் பார்க்க வேண்டும்

ஓர் மொழி பேசவேண்டும் - அதை
தாய் மொழியாக்க  வேண்டும்
வாழ்வதற்கு இடம் ஒன்று
வையமெனக் கொள்ள வேண்டும்

பணத்தினை பகைக்க வேண்டும்
பாசம் வைக்க பழக வேண்டும்
ஆதிக்கந்தனை வெறுக்க வேண்டும்
அடிமைநிலை அழிக்க  வேண்டும்

சுதந்திரமாய் வாழ வேண்டும்
சூழ்ச்சிகளை  சபிக்க வேண்டும்
இத்தனையும் இசைவில் வந்தால்
இனிதொரு மிருகமாவோம்

No comments:

Post a Comment