Thursday 10 November 2011

மாவீரக் கண்மணிகள் நினைவாக ஒரு கும்மிப்பாடல்


கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கார்த்திகை மாதத்து தீபங்களைப் போற்றி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கந்தகப் பொறி கொண்டு வந்தோரை எரி கொண்ட
காலத்தின் வீரரைப் போற்றி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கரிகாலன் பின்வந்த கார்த்திகை வீரரை
கரிகாலன் பேர் சொல்லி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
குடும்பத்தை விட்டு நம் குலம் காக்கச் சென்ற
குலத் தெய்வங்கள் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

தமிழோடு உறவாடி தரையோடு விதையான
தமிழீழத் தேசத்து தன்மான வீரர்  இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கடலோடும் தரையோடும் காற்றோடும் போராடி
நமைக்காத்த நாயகர் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

எதுவந்த போதும் எதிர்த்தாடி வென்ற
எம்மீழ தேசத்து மறவர்கள் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

நாம் வாழ்ந்த தேசத்தை  எமக்காக நேசித்த
எம் வீட்டு வீரர்கள் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

வரலாற்றை தம் பேரால் வரியாக்கிச் சென்ற
வள்ளல்கள் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

பாரோடு போராடி தாய்நாட்டின் புகழ்காத்த
தன்மான வீரர்  மாவீரர் இவரென்று
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

ப.பார்தீ

No comments:

Post a Comment