Wednesday 9 November 2011

நிர்வாணம்

கேட்பவர் காதுக்கு
கேடுகெட்ட சொல்லாகும்
பார்ப்பவர் கண்களுக்கு
பரவசக் காட்சியாகும்

அறிவுடை மக்களுக்கு
அதுகுமொரு சொல்லாகும்

ஓசைக்கு உருக் கொடுத்து
உருவான மொழிகளிலே
உன்ன தமாம் தமிழ்மொழியில்
கருவான பதங்களிலே
உருவான ஒரு சொல்லே
நிர்வாணம் என்ற பதம்



பாலுக்கழும் குழந்தைக்காக
தாய்முலையை வைத்தபோது
பாலும் தர மறுத்த முலை
தாய் மனதில் நிர்வாணம்!!!

கல்வி கற்கும் வேளையிலே
கற்ற கல்வி மறந்ததினால்
கேட்ட கேள்வி தவறாக
கேடுகெட்ட நிலையுமது நிர்வாணம்!!!!

காளையர் பருவத்திலே
வேலைக்காக சென்றுவந்து
வேதனத்தை விரையம் செய்தால்
மூலதனமற்ற நிலை நிர்வாணம்!!!!

ஈண்றெடுத்த பெற்றோரை
இறுதிவரை பாராது
சொத்துக்காய் திரத்திவிடும
துாய்மைகெட்ட செயலுமிது
துரோக முடை நிர்வாணம்!!!

அடிமைகளின் வாழ்வுக்காய்
அரசியல் பேசிப் பேசி!!
அவர்தம் வாழ்வை
அழித்துவிடும் செயலும் கூட
 அசிங்க மான நிர்வாணம்!!!

உண்மையாகச் சொல்வ தென்றால்
நிர்வாணம் என்ற பதம்
நிலையற்ற இவ்வுலகில்
நிரந்தர மானதுவே!!!!!

செய்பவர்  சிந்தனையில்
செயல் தனைக்  கொண்டு வந்தால்
ஆடையற்ற இவ்வுலகே
அழகான நிர்வாணம்!!!!!!
ப.பார்தீ

No comments:

Post a Comment