Sunday 6 November 2011

என் தோழி


பூக்களின் மலர்ச்சியே என் தோழி
உந்தன் புன் முறுவள் தெரியுதடி என் தோழி
சூரிய உதயமடி என் தோழி
உந்தன் சிந்தையின் வெளிச்சமடி என் தோழி

முழுமையான கண் இருந்தும் என் தோழி
முழுவியலம் பார்ப்பதுவும் ஏன் தோழி
சிந்தையின் வித்துத்தானே என் தோழி
சகுணத்தடை பார்ப்பதுவும் ஏன் தோழி

காலத்தின் கணக்கெடுப்பே என் தோழி
கரி நாட்களையும் கணக்கெடுத்தாய் ஏன் தோழி
பிறந்த போது குழந்தைதான் என் தோழி
வளர்ச்சி கண்டும் எழுச்சியில்லை  ஏன் தோழி

பெரியவரின் வார்த்தையே என் தோழி
பிழைகள் அதில் இருப்பதுவும் ஏன் தோழி
திருமணத்தில் வாழ்வுதானே என் தோழி
சீதனமும் தாலியும் ஏன் தோழி

தொழில் செய்யும் வர்க்கமே  என் தோழி
தொடாச் சாதி ஆனதும் ஏன் தோழி
கூட்டமைப்பு வளர்ச்சிதானே என் தோழி
கூடி வாழப் பழகவில்லையே ஏன் தோழி

மதம் என்றால் கடவுள் தானே என் தோழி
மடமைத்தனம் புகட்டுவதும் ஏன் தோழி
மொழி என்றால் தமிழ்தானே என் தோழி
உன்னை இழிவாகக் பார்க்கிறார்கள் ஏன் தோழி

பாரில் உள்ள உயிரினங்கள் என் தோழி
பாகுபாடு பார்க்கல்லையே  ஏன் தோழி
பிறப்பென்றால் இறப்புத்தான் என் தோழி
உன்னை உண்மையுடன் பற்றுவார்கள் ஏன் தோழி
ப.பார்தீ

No comments:

Post a Comment