Sunday 6 November 2011

கேள்விகள் கேளடி தோழி


தோழியே உன்னிடம் ஓர் கேள்வி
கேட்பதால் நீயுமோர் பாவி
யாரிடம் உள்ளது ஞானம்- அதை
கேள்விகள் ஆக்கனும் நீயும்

பாவங்கள் செய்திட்ட மனிதர் - இப்
பாரினில் படைத்தனர்  இறைவன்
ஆண்டவன் பேரினைச் சொல்லி - இங்கே
அடிமைகள் வந்தனர் பாராய்
சாதிகள் வீதிகள் பிரித்தார் - தெரு
சாக்கடை வீட்டினில் வளர்த்தார்
ஆயுத பூசைகள் செய்தார் அதை
காத்திட பல வேலைகள் செய்தார்

சாஸ்திரம் தோத்திரம் செய்தார்- அதில்
சாமிகள் வாழ்வதாய்ச் சொன்னார்
சாவுக்கு சாஸ்திரம் பார்த்தார்- பாவம்
செத்தவர் படத்திற்கும் பூசைகள் செய்தார்

வீதிகள் தோறும் பல கோயில்கள் செய்தார் - அதில்
வேடிக்கை பூசைகள் நித்தமும் செய்தார்
படையல்கள் பலவிதம் போட்டு- பாவம்
பாறைகள்  உண்பதை பார்த்து மகிழ்ந்தார்

ஆண்டவன் கேட்பதாய்ச் சொல்லி
ஆயிரம் உயிர்பலி கொடுத்தார்
துன்பத்தை துடைப்பதாய்ச் சொல்லி -பல
இன்பத்தை பூமியில் புதைத்தார்

தேவைகள் வேண்டியே செல்வார் -அதை
தேற்றிட நேர்த்திகள் செய்தார்
குறைதனை சொல்லியே அழுதார் - அந்த
குறை தீரத்த மனிதனை மனதினில் மறந்தார்

தமக்காகவே எல்லாமும் செய்தார் -அதை
தரணியில் பெற்றதாய் சொன்னார்
பாரினில் வாழ்கின்ற உயிரில்- இவர்
பாவம் பாழ்பட்டுப் போனார்

கேள்விகள் கேளடி தோழி உன்
கேள்வியால் மாறனும் பூமி
மூட மனிதரை கண்டால் நீ
ஞானம் கொள்ளணும் தோழி
 ப.பார்தீ

No comments:

Post a Comment