Saturday 12 November 2011

சுனாமி தானே எம் நண்பன்


சென்ற பின்தான் தெரிந்ததென்ன
கண் இருந்தம் குருடர் ஆனார்
காது கேட்டும் செவிடர் ஆனார்
வாயிருந்தம் ஊமை கொள்ள
காலம் தாழ்த்தி வந்த உண்மை
காட்டாற்றில் எழுத்து போல

இங்கு தான் நடந்ததென்ன
மூக்கு முட்ட சாப்பாடு
நாக்கு சுவை சாராயம்
பேச்சுத்துனை தாசிப் பெண்கள்

இஷ்டம் போல காசுதவி
அத்தனையும் கிடைத்ததங்கே

உற்று நோக்கா ஊணக் கண்கள்
நிகழ்ந்த தென்ன இன்று இங்கே
கூட்டுக்குள்ளே மிருகம் வைத்து
காட்சிக்காக இருப்பது போல்
வேற்று நாட்டு தோழர் நோக்க
விந்தையான பொருகள் ஆனோம்

எழுதுவதற்கு எதிர்ப்பு
பேச்சிலே வெறுப்பு
ஆட்சியிலே மொழி அழிப்பு
திட்மிட்ட கடனழிப்பு
பணவீக்கம் பந்து போல
முதலீடு என்று சொல்லி
முழு நிலமும் அவர்களோடு

கலாச்சார சீரழிப்பு
கருவினிலே இன அழிப்பு
சுடு குழலால்  மேற்பார்வை
சுதந்திரம் இது என்றால்
சுனாமி தானே எம் நண்பன்
ப.பார்தீ

No comments:

Post a Comment