Thursday 15 December 2011

பயிர்


விதைத்து விட்ட பயிர் தனை
பருவம் பார்த்து பாடு செய்து
பெரு விளைச்சல் பெற்றிடுவான்
விவசாயி

தொட்ட சுகம் பிறப்பெடுக்க
வந்த தொரு பயிருக்காக
பக்குவங்கள் செய்ய வேண்டும்
பாரில் உள்ள பெற்றோர்கள்


பசி எடுத்தால் பால் சேறு
படுத்துறங்க பாய் விரிப்பு
அணிவதற்கு ஆடை அணி
அறிவுற்கு நற் கல்வி

கொடுத்ததுடன் சரி என்றால்
குழந்தை அது வளர்ந்திடாது
நல் வழியை சமைப்பதற்கு -
உறு துணையாய் வாழ வேண்டும்

தனிமை நிலை தவிர்க்க வேண்டும்
இனிமையாகப் பேச வேண்டும்
தலை வருடி தாழ் நோக்கி
மாற்றங்களை பார்க்க வேண்டும்

தவரும் வரும் சரியும் வரும்
தண்டனைகள் தவிர்க்க வேண்டும்
சரி வளர்ச்சி புகட்ட வேண்டும்
சமநிலையை உணர்த்த வேண்டும்

ஏக்கங்கள் தொட்டு விட்டால்
தாக்கங்கள் உட் புகுமே
என் நிலையில் ஏக்கம் என்ற
ஏது நிலை விளர்க்க வேண்டும்

உம் ஆசை நிறைவேற்ற
பிஞ்சுகளை வருத்தாதீர்
ஆற்றலினை  இனங் கண்டு
அதன் வழியே துாண்டிடுங்கள்

அரும்பு விடும் செடிகளினை
அறுத் தெடுத்து அடக்காதீர்
வகையாகப் பாடு செய்து
வளர்தெடுத்து விட்டிடுங்கள்

நீர் வளர்க்கும் நற் செடியே
நல் விளைச்சல் தந்து நிக்கும்
நாளை என்ற மானிடத்தின்
நம்பிக்கையே அவர்கள் தானே

ப.பார்தீ

No comments:

Post a Comment