Tuesday 13 December 2011

விலை போச்சே


சிறுதொழில்கள்
சிதைவுற்று
சில்லறைகள் தாளுமாகி
பணவீக்கம் பந்தாகி
விளையாடத் தொடங்கியதே


வருமானம் வரவில்லை
வங்கி கடன் தருகிறது
தொலை நோக்கம் தவறவிட்டு
கடன்காரர் ஆகினரே

முதலீடு செய்வதற்கு
மூலதனம் கிடைக்குதென்று
சிறுதொழிலை கைவிட்டு
சீமை நோக்கி செல்கின்றார்

கிராமத்தின் அடித் தளம்தான்
பட்டணத்தின் வளர்ச்சி என்ற
பக்குவத்தை மறந்திட்டார்
பட்டணமும் பயனமானார்

ஈச்சம் செடி காய்தாலும்
இடைவெளிகள் இருந்ததுண்டு
இங்குவந்தோர் வாழ்க்கை எல்லாம்
அதனிலும் கேவலம்தான்

குடிக்கும் தண்ணிமுதல்
குந்தியுள்ள இடம்வரை
அத்தனைக்கும் பணம் கொடுத்து
உரிமையற்று வாழ்கின்றார்

இயற்கையேடு வாழ்ந்தது போய்
இயந்திரமாய் வாழ்கின்றார்
பந்தம் பாசம் சொந்தம் எல்லாம்
பணத்தோடு விலை போச்சே
ப.பார்தீ

No comments:

Post a Comment