Friday 30 October 2015

காணாத இருபது


சப்பாத்தின் விலை
ஒன்பது தொன்னூறு
விற்பவனிடம்
வாதாடிக் களைத்துவிட்டேன்
குறையும்
இருபது சதத்திற்காய்


வாயாற முடியாது
இருந்த காலங்களில் எல்லாம்
வறுமையின் கோரத்தை போக்க
நட்சத்திரங்களை எண்ணியபடி
வயிறை நீரால் நிறப்பியதுண்டு

இது சற்றே மாறுபட்டது

ஆடம்பரம் என்றோ
ஆசைஎன்றோ
வரையறுத்து விட்டு விட்டால்
கால்கள்
தேவையற்றதாய் போய்விடும்

ஊரென்றால் பறவாயில்லை
சப்பாத்துமுள்ளும்
சாணிப் பட்டியும்
கிரவல் றோட்டும் பழகிப்போன
ஒன்று

இது சற்று மாறுபட்டது

மண்ணில் கால் படுவதே இல்லை
மாறிப்பட்டு விட்டால்
குளிரின் கோரம் ஊசியாய் குத்த
விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும்.

இருக்கும் பழசுகளிலும்
இடையிடையே ஓட்டை
எப்படியும் இந்தமாதம்
தாங்கும் தாங்கும் என்று
இரண்டு மூன்றுமாதங்கள்
ஓடி விட்டது.

இருந்தும்
இன்னும் அவனிடம்
இரக்க மனமில்லை
இருபதிற்காய்
இந்த மாதமும் தாங்கும்.
என் சப்பாத்து

No comments:

Post a Comment