Wednesday 28 October 2015

நான் காட்டிய ஊர்...


அடையாளம் தெரியாமல்
அரச மரங்கள் எல்லாம் புத்தனின் தியானத்தில்
இரத்தம் சொட்டிக்கொண்டு இருந்தது

என் அம்மாவின் சமாதியின் மேலே
சில குடிசைகள் சிங்களம்பேச
அதன் அருகில் புது வீதிகள்
திசை மாறிக்கிடந்தது

அந்நியனின் காலடி ஓசைக்கு
அகிலத்தையே கூட்டும் நாய்கள்
குரைத்துக் களைத்துபோய்
அவன் காலடியில்
உணர்வற்றுக் கிடந்தது

காலையோ மாலையோ
கள்ளுத்தவறணைகள் நிரம்பி வழிந்தது
கலாச்சாரம் சில அம்மாக்கள் முந்தானையில் தொங்கிக்கிடந்தது

பழையவீடுகள் புதியசுவர்களால்
தனித்து நின்றது
பச்சை உடைகள் மிச்சமான கற்பையும்
எச்சில் செய்தது

இதனைக் கண்டு என்மனம் குமுறி
அழுவதற்குள்
அப்பா எங்கள் நாடு எங்கே? எனறாள்
பிள்ளை
ப.பார்தீ

No comments:

Post a Comment