Wednesday 28 October 2015

போருக்கு

அவன்
இருப்பது ஒரு விளையாட்டு மாடம்
விளையாடும் குழந்தைகளில் அவன்
அகதிப்பட்டம் கேட்ட சுதந்திர தாகம்.

அவன் விளையாடுகிறான்
காலத்தின் காயத்தை கலைகளாய்ப் படைத்து சிலைகளாய் வடித்து
சிந்தையாக்கி



அவன்
அங்கிருக்கும் பொருட்களால் ஆயுதம் செய்கிறான்
அதைக் கொண்டு தாகர்க்க அடுக்குமாடி
வீடுகளும் கட்டுகிறான்
எதிரில் நிற்கும் குழந்தைகளை
எதிரியாய் எண்ணுகிறான்


இரக்கமற்று சிலவேட்டுக்களை
வாயால் முழக்குகிறான்
வாடி விழும் குழந்தையின் மார்பில்
காலால் எத்துகிறான்
கடும் வார்த்தைகளால் கத்துகிறான்.
எதிரியே ஏன் என் எல்லைக்குள் வந்தாய்
என்கிறான்.

இரக்கமற்று என் தூக்கத்தைக் கெடுத்தாய்
பால் தந்த அம்மாவை பறித்தாய்
பழகிய சொந்தங்கள் பந்தங்களைப் பிரித்தாய்
பசிக்காக பிறதேசத்தில் பறி ஏந்தவைத்தாய்
பாவியே உன்னை விடேன் பழிதீர்ப்பேன் என முழங்கினான்.

பாவம்
போர்களுக்குப்புரிவதில்லை
உயிர்கள் காவும்
உணர்வுகளின் வலி.
ப.பார்தீ

No comments:

Post a Comment