Friday 30 October 2015

சாயம்


சாயம் பூசிய விரல்கள்
விளக்கி நின்றது
ஜனநாயகம் ஓர்
பச்சோந்திகளின் வாழ்விடம் என்று

வாக்குப் பெட்டிக்கு முன்
வரையப்பட்ட
வாக்குறிதிகள் அதன்
கிரீடமாய் எங்களை ஊக்கிவித்தது

எத்தனை கேள்விகள்
எத்தனை சந்தேகங்கள்
எல்லாம் ஊமைகளின் வார்த்தயாய்
உள்ளுக்குள் புதைந்து கிடந்தது

வீபூதி பூசிய ஐயனும்
குர்றான் தூக்கிய மொளளவியும்
சிலுவை தூக்கிய பாதரும்
சந்தர்ப வாதத்தால்
புத்தனைத்தம் கடவுளாக்கத் துடித்தனர்

இது நடந்துவிடும் அது நடந்துவிடும் என
ஆழப்புதைந்த ஆன்மாக்கள்
யாரும் கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கனவுகளில் கண்ணீர் விட்டனர்

ஏதோ பார்போம் கிடைப்பதை
எடுப்போம் என்ற இயலாமை
அடிமைகளின் சுதந்திரத்தாகத்தை
இல்லாது போக்கிவிட்டது
உலகின் முன்.

எது எவ்வாறும் போகட்டும்
சாயம் காயாத விரல்கள்
ஜனநாயம் அதிகாரங்களின்
சுதந்திரமே எனக் காண்பித்தது
அதிகாரி சொன்ன
"அந்தப்பெட்டியில் போடுங்கள்" என்ற வார்த்தையில்

No comments:

Post a Comment