Friday 30 October 2015

படராயோ பனிபோல்


எப்போதும் போலவே
மேற்கின்
அடிவானம்
மெல்லக்
கறுக்கின்றது
அதன் வரவில்
நட்சத்திரப் பூக்களின்
நடுவே
முழுமதி ஒன்று
என்னைப்போல்
ஏகாந்தமாய்
இரவை
இரசிக்கின்றது


ஆரவாரமற்ற
ஐரோப்பாவின்
மெல்லிய மனித்தூரல்
புல்லின் நுனியில் சிக்கி
மண்ணை மணப்பதற்காய்
கனதிவேண்டி
காற்றில்வரும்
தூரலை ஏக்கத்தோடு
அணைக்கின்றது

ஆங்காங்கே
அடைய வரும் குருவிகள்
ஆண்மாவின் துடிப்பை தூண்டுவதாய்
சோடிசோர்ந்து
காதுக்குள் காதல்
கானம் இசைக்கின்றது

ஆனாலும்
மேகமூட்டத்தில்
புதைந்து
மெல் ஒளியில் வீரியம்
குறையும் நிலவுக்காய்-என்
சொர்பணம் ஏங்க
அதன் சோடினையின் ஏக்கத்தில்
கரையும் ஸ்பரிசம்
தாலாட்ட
கிழக்கில்
வெளுத்த வானம்
என்
எதிரியானது

No comments:

Post a Comment