Friday 30 October 2015

கவிதை ஒரு பேக்காட்டு


உணர்ச்சிகளை சொற்களாகக் காட்டினால் கவிதை என்கிறார்கள் உண்மையற்று கற்பனையில் கூறினாலும்
கவிதை என்கிறார்கள்


உணர்ச்சிகளை எவ்வாறு சொற்களில் அடக்குவது?

வர்ணிக்கமுடியாதவையும் வார்தைகள் அற்றதும்தானே உணர்ச்சிகள்

அதனால்தான் என்னவோ
காதல்
கட்டற்ற வார்தைகளாக காலத்திற்கும் புதுமை பெறுகின்றது கவிதைக்குள்

இருக்கும் பொருள் ஒன்றை வரிக்குள் அடக்கலாம் ஆனால்
அதன் இரசனை
அறிவுக்கேற்ப ஆழமாய் பயணிக்கும் கவிதைக்குள்

இங்கு எந்த உணர்விலும் ஒற்றுமையில்லை இருந்திருந்தால் இறைவன் ஒன்றாகிஇருப்பான்
அல்லது
முழுமையாய் இல்லை என்றாகியிருப்பான்.

ஆனாலும் கவிதை மறைந்துகிடந்து சாட்டைநீட்டும் ஓர்
போர் அதிகாரம்

அது
அன்பு பேசும்
அரசியல் பேசும்
ஆதாரமற்ற பொய்கள் பேசும் அவகாசம் கிடைத்தால் அவரவர் இச்சைக்குள் அடங்கிவிடும்.

இப்பேது என் கவிதை புரிந்திருக்கும்
கவிதை என்பது ஒரு பேய்காட்டு காலத்தின் உண்மை அறியாதவனுக்கு கயவர்களால் தீட்டப்படும் ஈழப்போராட்டம்போன்றது

No comments:

Post a Comment