Friday, 30 October 2015

நித்திய வாழ்வு


கோழி, ஆடு, மாடு, கோயில்மணிகளின்
சமிக்கைப் பொழுதுகள்
மறந்தது

உறைபனியின் இறுக்கத்துள்
சூரிய மேச்சல் பரப்பு
சுருங்கித் தவித்தது

விளிப்பு
தேநீர்க் கணகணப்பிற்கு
ஏங்கியது

சேர்ந்து நிற்கமுடியாத
மணி முட்கள்
கடமைக்குள் உழன்றது

போர்வையின் அமுக்கம்
பொழுதை
இறுகப்பற்றியது

சுமை திண்ற வாரநாட்கள்போல்
விடுப்புநாளும்
அழைப்பும் அரிப்பும் அற்ற
ஏகாந்தத்துள் கரைந்தது.
(ப.பார்தீ)

No comments:

Post a Comment