Friday 30 October 2015

ஐ. நாவே என் சாட்சியை ஏற்றுக்கொள் .


என் முற்றத்தில்தான் அவள் பிறந்தாள் அவள் அண்ணனும் பிறந்தான் என் வயது அவர்கள் பாட்டன் வயதிலும் பல ஆண்டுகள் மூத்தது உங்களுக்குத் தெரியும் நீங்கள் கொடுத்த சுதந்திரம் சிறையிலும் கொடியதென்று எத்தனை முறை அவர்கள் என்னை தனியாகவிட்டு போயிருக்கிறார்கள் எத்தனை முறை நான் உறிஞ்சிய நீரில் தமிழனின் இரத்தவாடை எத்தனை
முறை என்முற்றத்தில் அன்னியனின் அடாவடித்தனம் 
நீண்ட நாட்களின் பின் என் பிள்ளைகள் என் முற்றத்தில் ஓடித்திரிந்தனர் எனக்குத்தெரியும் அவன் போராடி விழுந்த போது அவர்கள் கண்ணீர் என்னை நனைத்ததை
ஒரே நாடு ஒரே மக்கள் என்று உரக்கக் கத்தும் குரல் என் காதுகளில் விழும் மகிழ்வில் சில மகரந்தத்தை பூவாக்கி காயாக்கினேன்

இது நடந்து காலங்கள் ஆகவில்லை என் இதயத்தில் பெரும் அதிர்ச்சி
அவள் பதினாறை முடித்து பதினேழாகிப்பள்ளி செல்பவள் அவள் என் பூட்டி சிட்டுக்குருவியாய் என் மடியில் ஊஞ்சல் கட்டி ஆடுவாள் அவள் அழகு ஆன்மாவின் துடிப்பு பண்பாட்டின் உண்மை அன்றுதான்
ஒரே தேசத்தின் காவலர்கள் உள் நுழைந்தார்கள் அண்ணன் சேவையில் அதிருப்தி கண்டவர் போலும் நீ எதற்கு உதவினாய் என்ன செய்தாய் என இருட்டைத் தேடினர் தாயும் பிள்ளையும் வாழ்ந்த வீடு தனிமையும் வறுமையும் சொந்தமிங்கே காவலர் போர்வையில் காமுகர் புகுந்து தாயைத்தாக்கி பின் தனிமையில் இருந்த அவளைப் புணர்ந்து அசிங்கம் செய்து ஆசையை தீர்த்தனர் ஐயோ அவள் குரல் மனதை பிளந்தது மொளனமாகிக்கிடந்தேன் அருகில் இருப்பவரை அழைத்தேன் அத்தனையும் உயிர்தாங்கும் சடலங்கள் நான் என்ன செய்வேன் என் இலைகளை உதிர்த்தி அவர்கள் அழகைப்புதைத்தேன் என்மடிக்குள் நாட்கள் போகட்டும் தமிழன் பிணம் தோண்டுபவர் வருவர் அதில் நீங்களும் உறுப்பினராய் இருப்பீர்கள்

No comments:

Post a Comment