Friday 30 October 2015

கற்பனைகுண்டோ காலமெனும் உண்மை


கட்டிலின் கீழே
தூசிபடிந்த
பாட்டியின் பழைய 
இறங்கு பெட்டிக்குள்
உள்ள அவள் நாளேட்டின்
உண்மை எழுத்தைப்
புணரமுடியாத கண்களைப்போல்
காரணம் தேடி அலக்கழியும்
வாழ்கை
புதுப்புது அர்தங்கள்
உணர்த்திச் செல்ல


அறியாமல்
அர்த்தமற்றுக்
கிறுக்கும் சிறுமியின்
ஓவியம்போல்
கற்பனை எனும்
காலக்கணிப்பின் மாயை
இரவு பகலாகும்
பூமிச்சுழர்சிக்குள் பல
பொய்க் கனவுகளை
விதைத்தபடியே
பயணிக்க

வாழ்ந்தவர் படிமத்தின்
வளங்களும்
வரலாறும்
பிறப்பு இறப்பு
எனும் முறனுக்கிடையில்
புனையப்படும்
உண்மைக்
கதைகளின்உண்மையை
உறுதியான மரணம்போல்
காலம் காட்டிக்கொடுக்கும்.

No comments:

Post a Comment