Friday 30 October 2015

ஊர் விலாசம்

ஊரின் சுகம் அறிய
என்னிடம் இருக்கும் 
சில்லறைகளை எண்ணுகிறேன்

"அங்க போய்ச்சரி நல்லா இரு"என்ற
அம்மாவின் வார்த்தைகள்
காதில் ஊறிக் கணக்கைக் குழப்புகின்றது


எண்ணும் சில்லறைக்குள்
சிதிலமான என் வாழ்வின் தேவைகள்
புதைந்துகிடக்க



எதிரே வருவது அடையோ, கறுவலோ,
ரொமெனியனோ, என்ற கலக்கத்தில்
மீண்டும்
காசை மறைக்கிறது கைகள்

காலக் கோலத்தில்
காணாத மனிதனை
கணக்கில் போட

இருக்குமாப்போல் இருக்கும்
என்நிலை அறியாது
வயதின் வரிபடிந்த கை ஒன்று
பசியாம் இருக்கவீடில்லையாம்

எண்ணலும் முடிகிறது
பத்தாத சில்லறை ஊரின்
சுகமறியும் நினைவை அந்நியமாக்க

எதிர்க்கடை டீயின் சுகந்தம்
என் நாக்கில் ஊற
கரையும் 1:50ஈரோவில்
ஊறும் சுகமும் ஒதுக்கானது

மீதமுள்ள சில்லறையின்
கதைக்காய் .
(ப.பார்தீ)

No comments:

Post a Comment