Friday, 30 October 2015

துரோகத்தில் சிவந்த தொடுவானம்


விடிவை விரும்பாத மேகங்கள்
எல்லாப் பொழுதுகளிலும்
சூரியனைச் சூழ்ந்துகொள்கின்றது

உச்சவகாலங்களில் பூசாரிகள்
மூர்தியின் பெயரால்
பக்தனின் கண்ணில் அலங்கார அருள் காண்பிக்க
பழைய தோணி
துடுப்புகள் உடைக்கப்பட்டு
பயணத்தில் கரையொதுங்குகிறது

தொடங்குவது
தொடங்கியதை தொடர்வது
தொடர்ந்ததை கைவிடுவது பின்
தொடங்குவது என
துயரத்தின் பாதையில்
துரோகங்கள் வலி உமிழ்கிறது

சுய இலாபப் பித்தர்களால்
நடைமுறையில்
அவநம்பிக்கைகள் கூடி
சந்தேக முடிச்சுக்கள் மீதான
உண்மை குறித்த தேடல்
எல்லோர் நினைவிலும் மெய்யானது.
ப.பார்தீ
22-06-2015

No comments:

Post a Comment