கனவுகள்
ஏராளம் பெருகின
இருக்க இடமில்லாது
தூக்கத்தை மறந்து
பிசத்தல்
வார்தைகளாய்ப் பிரசவித்தது
இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
இருக்கும் ஒரு வார்த்தை
இல்லை என்பது போல் ஒரு விம்பம்
காட்சிப்படுத்த முடியாத
கடும் ஒளியில்
காணமுடியாத
பேர் அண்டத்தின்
பெரு உணர்வாய்
ஓர் படிமம்
கண்ணீர் வடிந்து
வாயில் உவர்க
கனவை நீட்டிக்
காத்திருந்தது
தூக்கம்
பசியைத்தந்தது
பாசத்தோடு உணவு தரும்
உறவுகளைப் பிரித்தது
ஒளியைத்தந்தது
ஒளியினூடே உலகை
அளக்கும் விழியைப் பறித்தது
மொழியைதந்தது
மொழி பேசும்
உணர்வைப்பறித்தது
குளிரைத்தந்தது
குளிரைப்போக்கும்
சூட்டைப்பறித்தது
இருந்தும்
தூக்கம்
கனவைத்தந்தது
ஏராளம் பெருகின
இருக்க இடமில்லாது
தூக்கத்தை மறந்து
பிசத்தல்
வார்தைகளாய்ப் பிரசவித்தது
இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
இருக்கும் ஒரு வார்த்தை
இல்லை என்பது போல் ஒரு விம்பம்
காட்சிப்படுத்த முடியாத
கடும் ஒளியில்
காணமுடியாத
பேர் அண்டத்தின்
பெரு உணர்வாய்
ஓர் படிமம்
கண்ணீர் வடிந்து
வாயில் உவர்க
கனவை நீட்டிக்
காத்திருந்தது
தூக்கம்
பசியைத்தந்தது
பாசத்தோடு உணவு தரும்
உறவுகளைப் பிரித்தது
ஒளியைத்தந்தது
ஒளியினூடே உலகை
அளக்கும் விழியைப் பறித்தது
மொழியைதந்தது
மொழி பேசும்
உணர்வைப்பறித்தது
குளிரைத்தந்தது
குளிரைப்போக்கும்
சூட்டைப்பறித்தது
இருந்தும்
தூக்கம்
கனவைத்தந்தது

No comments:
Post a Comment