Friday, 30 October 2015

கனவுக்குள் ஒலிக்கும் உயிர் மொழி.


மந்தமாய் மனதை வருடும் ஒளிக் கீற்றில்
மறைந்திருந்து பார்க்கும் பூவிடம்
மறுபடியும் 
காதலைச் சொல்கிறேன்


கனவுகளில் காய்ப்பது நீ என்றால்
பூத்துக் குலுங்குகிறது
உள் மனது

வார்தைகள் எதுவும் இல்லை
வந்துபோகும் நினைவுகளில் கண்களால் குழைந்து கொண்டு கதை சொல் என்கின்றாய்

எனக்கும் உனக்குமான பாதை
முற்றிய வசந்தம்
முழு
அழகையும் இரசித்துக்கொண்டே
மனம் காற்றில் மிதக்கின்றது

வானம் நமக்காக விரிந்து கிடக்க
புது மொழியில்
கூடும் மாடப்புறாக்கள் நினைவுகளை
மீட்டுத்தருகின்றது கூட்டுக்குள் இருந்தபடியே
ப.பார்தீ

No comments:

Post a Comment