Wednesday 28 October 2015

கண்ணாடி முன்...


அந்தவயது ஒரு விசித்திரமானது பருவத்தைச் சுமந்து கொண்டு சில பருக்கள் முகத்தை முத்தமிட்டது எண்ணற்ற கனவுகள் இயற்கையையும்மீறி மாற்றத்தில் காதல் கொண்டது

கட்டுப்பாடுகள் எல்லாம் இறுக்கப்பட்ட தூக்கு கயிறாக பிணைந்து கிடந்தது அடயாளம் தெரியாமலே அங்கங்கள் மாற்றங்கண்டது

அப்போது
தனிமை வரமாகப்பட்டது வாதாட முடியாத வேதாந்த சித்தாந்தங்கள் ஒரு புதியதை பார்க்க எண்ணியது அதன் அழகில் மூழ்க எண்ணியது அதற்காக தேடவும் தொடங்கியது

இது ஒரு மாற்றத்தை தேடிய வளர்ச்சி தட்டிக்கொடுக்கும் கைகளை முத்தமிடும் ஏக்கம் அதன்
அன்பின் பிடிப்பில் அழகாகும் வாழ்கை
விதையாய்

No comments:

Post a Comment