Monday 2 February 2015

அறிந்தும் உணராதமனம்....


எரிந்து விழுகிறேன் என்று கூறுகிறாய் 
நாம்விழுந்ததே நெருப்புக்குள் என்றுதெரியாது

அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை 
கோவத்தின் தேடல் மட்டும் ஆழமாய்
அன்புக்குள் புதைத்து விடுகிறது

முழு மதி இரவில்
ஜன்னல் இடையால் நிலவைப்பார் 
மேகம் மோதும்போதெல்லாம் கோவத்தில் 
நிலவு மேகத்தையே போர்வையாக்குவதை

இங்கு விடியும்போது பிறப்பவை சில 
இருளும்போது மாண்டுவிடும் நியதி
அழுகையை அடக்கச் சுரக்கும் மார்புக்கு ஒப்பல்ல
இது இயங்கும் பிரபஞ்ச விதி.

கடவுள் இல்லை என்பவனுக்கு 
அன்பு படைப்பாகவும்
அறிவு காத்தலாகவும் 
புதைந்து கிடக்கும் புன்னகை ஒன்றின் தாலாட்டுக் காதல்
ப.பார்தீ

No comments:

Post a Comment