Monday 10 November 2014

நிர்வாணப் பூக்கள்.


யூலை 5

மறுபடியும் கரும் வீரருக்காய் நினைவுகளைச் 
சுமந்து கொண்டு கண்ணீர் சொரிகின்றன
 மேகங்கள்.

இடி மட்டும் வராது வானுக்குள்ளேயே 

புதைந்து கொண்டு காற்றிடம் 
முணுமுணுத்தது.

காவிச்சென்ற கந்தகப்புகையில் கரைந்து
போன வீரத் தமிழன் விலாசத்தை. 
ஆராரோ பாடிய அம்மாவை. 
அறிவூட்டிய ஆசானை

யார் அறிவார்
அந்த வளர்ப்பின் தாய் ஆண் என்று.

கேள்வியின் நீளம்மட்டும் வீரத்தை

 புகட்டிவிட்டால் யாவரும் சங்கிலியனாய்
 யாவரும் பண்டாரவன்னியனாயல்லவா 
வாழ்ந்திருப்பர்.

தமிழன்
புரிந்த பூகோளரகசியம் புத்தனின் காதுகளில் 

கேட்டபோதுதான் நிர்வாணஅழகை உணர்ந்து 
கண்கலங்கினான்.

மரணம் விதியல்ல
மறவர் மொழி என்று.

ப.பார்தீ

No comments:

Post a Comment