Monday, 10 November 2014

நடு நிலையாளருக்கு ..


ஐயாமாரே
நீங்கள்
நீதிபதிகளாகவே இருந்து விடுங்கள்

குற்றங்களும்
வழக்குகளும்
உங்களைத் தேடப்போவதில்லை

நீங்கள்
பேசும் நீதிகளில்
எங்கள் வயிறும்
எங்கள் வீடும்
மகிழப்போதில்லை


உங்களைப்பற்றி
எங்களுக்கு
கவலையில்லை

அப்பக்கதையில்
தராசு பிழையா
அப்பம் சுட்டவன் பிழையா
அதை பிய்த்தவன் பிழையா
யாம் அறிவோம்

நீதி
அறிந்தவர் மக்கள்
அவர்கள் முன்

ஆசைப்படும் குரங்கிற்கு
நீதியும் பதவியே
ப.பார்தீ

No comments:

Post a Comment