Wednesday 30 May 2012

ஈசன் அடி போற்றி


எனக்கும் உனக்கும்
ஏன் இந்த வேற்றுமை
இயங்கும் மனிதன்
இருந்தும் இறக்கிறான்

அடுத்த கிரகமும்
ஆய்வினில் வந்தது
துடிக்கும் இதயமும்
மின்கலம் இயக்குது


மனிதப் படைப்புகள்
உன்னையும் மிஞ்சுது
நீ மனிதனை படைத்ததில்
பொய்யும் புலம்புது

ஆய்வின் பாதையில்
அதிசயம் இல்லையே
ஆய்வின் உண்மையில்
ஆண்டவன் பொய்யனே

கேள்வி கேட்பதால்
ஞானமும்  பிறக்குதே
கேட்க்கப் பயந்ததால்
பொய்மையும் ஜெயிக்குதே

எல்லா மனங்களும்
உன்னிடம் திறக்குதே
எல்லா செயலையும்
மனிதமே இயக்குதே

கல்லை வடித்த பின்
கடவுளாய் தொழுகிறார்
வடித்தவன் செயலினில்
நீ ஒரு சிற்பமே

உனக்கு புரிவதாய்
வாய் மொழி ஓதிரார்
எனக்கு தெரிந்ததில்
யாவரும் மடையரே

மாதர் சூல்களில்
தீட்டினைப் பார்க்கிறாய்
உன் மாதா சூலினில்
சுழற்சியும் இல்லையா

இறந்தவர் பிறந்தவர்
குடும்பமே துடக்கென
விலக்கிடும் செயல்களில்
விந்தை தான் என்னவோ

கற்பனை கதைகளில்
வந்தவன் நீயடா
காலம் ஓடினால்
ஹரிபோட்டரும் கடவுள் தன்

எத்தனை மனிதர்கள்
இறக்கிறார் பிறக்கிறார்
உன்னை தொழும் சிலர்
கருவிலே அழிக்கிறார்

அத்தனை செயலும்
அவன் அவன் விதியே
இத்தனை  நிலைகளில்
எங்கும் நீ இல்லையே

இல்லை என்பது
இருந்ததன் எதிர்மறை
இல்லை சொல்லவும்
என் மனம் மறுக்குதே

பொல்லா உலகினில்
பொய்யனை தொழுபவர்
எல்லாம் இயங்கியும்
நடைப் பிணமாகிறார்
ப.பார்தீ

No comments:

Post a Comment