Monday 21 May 2012

எனக்குள் என்ன தேடுகிறான்


என் கண்களில்
என்ன தேடுகிறான்
என் வார்த்தையில்
என்ன எதிர் பார்க்கிறான்

சூடான சுவாசத்தால்
சாம்பலான இதயம்
பாதி வயதை தாண்டியும்
பசி உணராத வயிறு


மீதமுள்ள யாவும்
போதி மரத்துப் புத்தன்
எனக்கு சொந்த மில்லாத உடலில்
என் உணர்வும் இருட்டே

இருந்தும் என் உள்ளம்

கோதிய கூந்தலில்
கொள்கை இழக்கவும்
ஞானி போல் நடித்து
நரம்புக்கு சுகமேற்றவும்
மீதி வாழ்க்கையில்
வியாக்கியானம் பேசவும்
நான் நல்லவள் அல்ல

பிதற்றலுக்காக சொந்தமான
என் வார்தைகளில்
பிணங்களின் வாசனை கூட
சுவாசத்துக்கு ஆரோக்கியம் தான்

இன்று அவன் தேடும் இச்சைக்கு
இனிய பதில்
இங்கு காதலுக்கு
இடமில்லை
ப.பார்தீ

No comments:

Post a Comment