Tuesday, 8 May 2012
இது மக்கள் போர்
எங்கள் நினைவு வலிகளை
எழுத முடியாது தவிக்கும்
மொழிகளே
நாங்கள் கூடும்
தினங்கள் எல்லாம்
துக்க நினைவுகளானதே
நீங்கள் உணர்ந்திடமுடியா
வலிகள் நிகழ்ந்த
அந்த நாட்களை
மீட்கும் உதடுகள்
பிரிவு இழப்பு
அழிவு ஏக்கம்
அழுகை என்று
பேசிப் பேசிப்
பிழந்து கிடக்கின்றன
அவன் கொண்டாட
விழாக்கோலம் பூணும்
மேடையின் கீழ்
எங்கள் எலும்புகள்
ஆயுதங்களாக திரிவடைந்து
ஒற்றுமை சக்தியுள்ள
உண்மை ஆட்த்தேடி
உறங்க மறுத்து
துடிக்கின்றது
வளவின் வேலியை
உயர்த்தி மறைக்கும்
நாங்கள்
நாட்டில் விதைத்த
உயிர்களில்
அறுவடைப் பயனுக்காக
ஐநா வரை சென்றும்
பயன் என்ன?
அந்தப் புனிதர்களின்
செந்துளிகளால்
நாங்கள் எழுதும்
வாழ்க்கை
எங்களையும் தாண்டிய
பரம்பரைகளின்
விடுதலைக்கான
ஆக்கத்தோடு கூடிய
அதியுயர்ந்த
சக்தி அல்லவா?
நினைவுகளை
வணங்குதல் செய்வோம்
என்பதை விட
எழுச்சிக்கு ஊந்திவிடும்
எரி சக்தியாக
நினைவு கூர்ந்து
சுழழும் பிரபஞ்சத்தில்
பிரளய மாற்றத்தை
பிரசவிப்போம்
இது மக்கள் போர்
ப.பார்தீ
Labels:
போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment