Wednesday, 16 May 2012

இதுவும் எமக்குள்


அழகு நிறைந்த வாழ்க்கை
தேடி அலையும் மனங்கள்
ஓர் நாள் உணரும் அந்தத் தவறை

எல்லா பிரசவங்களும்
சுகமாக நடப்பதில்லை
சில வேளைகளில்
மரணமும் சம்பவிக்கின்றது

ஒவ்வொறு பிறப்பும்
தோற்றம் பெறுவதில்லை
ஆக்கப்படுகின்றது


அழிவுகளில் இருந்து
புதிய பிறப்புகளும்
பிறப்புக்களில் இருந்து
புதிய அழிவுகளும்
எம்மை பின் தொடர்கின்றது

காட்சிகளுக்கு ஏற்றாற்போல்
சிந்தனை மாற்றமடையும்போது
சில மாற்றங்களுக்கு எற்றால்போல்
மனிதன் மாறுவதில் தவறுண்டா

எல்லாம் அழியும் என்ற
உண்மை தெரிந்தும்
இங்கு இயங்கும் சக்திமட்டும்
எதிர்கால சந்ததிக்காக
திட்டமிட்ட  நெறிப்படுத்தலை
ஏற்பதில் தவறில்லை

ஒவ்வொறு பிரசவத்திலும்
புதியதே தோன்று கின்றது
வளரும்போது
பழையதாகின்றது

புதியதை புதியதாக
வளர்ப்பது நிகழாது
எனும்போது
நாம் பழைய தாய் மாறுகின்றேம்

இந்த பிரசவம் புதியதோ பழையதோ
புரிந்து விட்டால்
நாமும் புதுக்குழந்தை
ப.பார்தீ

No comments:

Post a Comment