Tuesday, 15 May 2012

புது யுகம்


சூரியன் மறைவது
கோள்களின் தவறாதாம்
சுதந்திரம் என்பது
தலைவர்கள் நடப்பிலே

கோழையாய் வாழ்வதும்
வீரனாய் சாவதும்
கொள்கையின் ஈர்பதால்
கொண்டவர் நடப்பிலே


எங்களின் உளத்திலே
எத்தனை வீரர்கள்
எங்களின் மனங்களில்
எத்தனை போர்க்களம்

நம்பிக்கை என்பது
நாவுடன் நழுவுது
தென்திசை ஓங்குது
வடதிசை சிதறுது

சங்கங்கள் கூடுது
சரித்திரம் மாறுது
கேள்விகள் கேட்பவர்
துரோகிகள் ஆகுறார்

உங்களை ஆக்கிய
எங்களின் உழைப்புகள்
எம்மவர் போட்டியால்
ஏளனாமாகுதே

தனி ஒரு மனிதனால்
தரணியும் பேசுதே
தலைமுறை என்பது
தலைவனை நாடுதே

போர்களும் நீழுதே
போர்க்களம் மாறுதே
போட்டியை தவிர்த்துவா
புது யுகம் படைக்கவா
ப.பார்தீ

No comments:

Post a Comment