Saturday 12 May 2012

சமனிலும் மேலே


உங்கள் உள்ளங்களில்
உண்மை உணர்வுகள்
ஊமையாய் துாங்குகின்றது

இயற்கையிலே
படைக்கும் சக்திகொண்ட நீங்கள்
உலகின் பிரம்மாக்கள்

வலிமை என்பது
உங்கள் எழிமையான அன்பின்  முன்
இழகிய இரும்புகலே


நாகரீகமற்ற கட்டுபாடுயாவும்
இயற்கையின் பிறப்பல்ல
இதயமற்றவர்களின் ஆக்கம்

உங்களை போற்றவும்
உசிப்பி எழுப்பவும்
உலகம் துடிக்குது

புகழுதல் என்பது
வெற்றியின்  பேறு
நீங்கள் வெற்றியாளர்கள்

நீங்கள்  உங்களை உணராதவரை
பெண்ணியம் என்பது
பிரிந்த இரு முனைகளே

அவர்கள் சமனிலும் மேலே
ப.பார்தீ

No comments:

Post a Comment