Saturday 5 May 2012

காலத் தவறு


காலைக் கருவுடைத்து
கண் விழிக்கும்
கதிரவன் போல்
காதல் சுவை பயிர்க்கும்

பருவப் பயிர்களிடை
பார்வை பட்டு விட
படர்ந்த உணர் வினால்
பைந்தமிழ் வாய் காதல் சொல்ல


கால ஓட்டத்திலே
காதலது முற்றல் உற்று
கை கோத்து நடைபோட
கலியாணம் தேவைப்பட

பெற்றேரின் விருப்பபடி
பெரியவர்கள் சேர்ப்பதற்கு
பஞ்சாங்கம் பார்த்து நிற்க
பத்தும் பொறுந்தவில்லை

என்ன விந்தையிது

இரு மனங்கள் சேர்ந்த போதும்
இறைவன்  அருள் இல்லை என்று
திருமணத்தை நிறுத்தி வைத்தார்
திருவாக்கு சொல்பவர்கள்

காதலராய் வாழ்ந்தபோது
கற்பனையில் கூடுகட்டி
கணவணுடன் மனைவியாக
கண்களாலே வாழ்ந்ததினால்

மூடக் கொள்கைகளால்
முட்டிவந்த செய்தி கேட்டு
காலத் தவறை எண்ணி
காலனுடன் கைகோர்த்தார்
ப.பார்தீ

No comments:

Post a Comment