Friday 4 May 2012

எல்லாம் அவன் செயல்


பட்டணத்து பண்ணையிலே
மந்தை ஒப்ப எங்களிடம்
பணம் எனும் மேச்சல்காரன்
படுத்துகின்ற  பாடு இது

உதடுலர்ந்து நீ கேக்க
உடல் நிலையும் சூடு பெற
தவிக்கும் வாய் தனை மறந்து
தணல் காற்றாய் திரிகின்றான்


அடுக்கடையில் பூனையிடம்
அம்மாவும் போராட
அப்பாவின் வரவுமது
அவன் செயலால் ஆவி நிலை

துளை நிலத்தில் நீர் பெருகும்
சுழல் காற்றும் சுவாசமாகும்
அழிவடையும் இயற்கை கூட
அதன் வழியே ஈடேரும்

எல்லாமும் அவன் பார்க்க
இல்லாமை ஏங்கி நிற்க்க
மண்ணோடு நாம் சேர
மலிவு விலை கோரப்படும்

மாறும் என்ற மாக்ஸ்சியத்தால்
மாறும் இந்த சேட்டை எல்லாம்
மனமே நீ கலங்காதே
மானிடம் உன் உயிர் தானே
ப.பார்தீ

No comments:

Post a Comment